SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி... கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் ட்வீட்!!

2021-03-09@ 13:00:28

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் இந்த ஊசியை போட்டுக்கொண்டார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.

குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.

எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்