கிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றித்திரிந்த 15 வயது சிறுவனுக்கு கிராப் வெட்டி அனுப்பிய இன்ஸ்பெக்டர்
2021-03-09@ 01:12:24

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-மகாராஜகடை சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 15 வயது சிறுவன் காதில் கடுக்கன், கோழிக்கொண்டை கிராப் சகிதமாக டூவீலரில் வேகமாக வந்தான். அவனை வழிமறித்து விசாரித்தபோது இதெல்லாம் ”யூத் ஸ்டைல்” எனவும் மாடர்னாக இருப்பது தவறா? எனவும் எதிர் கேள்வி எழுப்பியுள்ளான். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், அந்த சிறுவனை அருகிலுள்ள சலூன் கடைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு முடி திருத்தம் செய்து, படிக்கும் மாணவர்கள் கல்வி கற்பதையும், ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் எனஅறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடந்த சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ஒரு சிலர் இன்ஸ்பெக்டரை பாராட்டியும், மற்றொருபுறம் சிறுவனை வீடியோ எடுத்து வெளியிடுவது சட்டப்படி குற்றம் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4.60 லட்சம் வழக்குகள் பதிவு!: தமிழக காவல்துறை தகவல்
கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பெர்ணமி அன்று திருவண்ணாமலையில் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை
கருப்பு எள் கிலோ ரூ.8 உயர்ந்து ஏலம்-விவசாயிகள் மகிழ்ச்சி
திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி மறுப்பால் பாதிப்பு தென்னங்கீற்று தொழிலாளர்கள் வறுமையில் வாடும் அவலநிலை
தாந்தோணிமலை அசோக் நகரில் வடிகாலின்றி சாலையோரம் ஓடைபோல் ஓடும் கழிவுநீர்
கரூர் வாங்கல் சாலையில் தாழ்வாகவுள்ள நகராட்சி குப்பை கிடங்கு சுற்றுச்சுவர்-காற்றில் குப்பைகள் பறக்கும் அவலம்
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!