SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம்

2021-03-09@ 00:49:33

கொல்கத்தா: கொரோனா 2வது அலை காரணமாக லார்ட்ஸ் அரங்கில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி ஜூன் 18ம் தேதி லண்டன் லார்ட்ஸ் அரங்கில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, லார்ட்ஸ்  அரங்கில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி சவுத்தாப்டன் நகருக்கு மாற்றப்படுகிறது. இதனை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். ஐசிசி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமை கட்டாயம்: ஐபிஎல் தொடர் மே 30ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு இந்திய அணி உடனடியாக இங்கிலாந்து புறப்படும். போட்டிக்கு முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதால், ஆஸ்திரேலியாவை போல் இங்கிலாந்திலும்  வீரர்கள் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். கங்குலி ரெடி: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பிறகு பிசிசிஐ நடவடிக்கைகளில் இருந்து அதன் தலைவர் சவுரவ் கங்குலி ஒதுங்கியிருந்தார்.  இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் அலுவலக பணிகளை தொடங்கியுள்ள கங்குலி, ‘முழு உடல்தகுதியுடன் நலமாக இருக்கிறேன்’ என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்