கொரோனா பரவல் எதிரொலி: டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்; சவுரவ் கங்குலி தகவல்
2021-03-08@ 17:45:56

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. இந்த இறுதி போட்டி கிரிக்கெட்டின் தாய்மண்ணான இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18 – 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்திற்கு பதிலாக இறுதி போட்டியை வேறொரு மைதானத்தில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றின் பரவலினால் வீரர்களை பயோ பபூளில் வைப்பது சற்று சவாலான காரியம் என்பதால் இந்த திட்டத்தை ஐசிசி முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும் ஐசிசி பேசி வருகிறது.
தற்போது கொரோனா அச்சம் காரணமாக அது நியூஸிலாந்திலுள்ள சௌதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். சௌதாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மைதானத்தில் பயோ பபுளில் வீரர்களை வைத்து போட்டியை நடத்துவது எளிது என்பதால் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகள்
ராகுல், மயாங்க் அரை சதம் விளாசல் டெல்லிக்கு 196 ரன் இலக்கு
மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் ஹாட்ரிக் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்
இன்று ஒரே நாளில் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
ஷங்கர், கலீல், ரஷித் அபார பந்துவீச்சு சன்ரைசர்சுக்கு 151 ரன் இலக்கு
சில்லி பாயின்ட்...
தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்!
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்