இலங்கைக்கு எதிரான கடைசி டி.20: 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி...2-1 என தொடரை கைப்பற்றியது
2021-03-08@ 15:52:40

கூலிட்ஜ்: இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2வது போட்டியில் இலங்கையும் வென்றன. 3வது மற்றும் கடைசி போட்டி இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்தது. குணதிலகா 9, நிசங்கா 5, டிக்வெல்லா 4, கேப்டன் மேத்யூஸ் 11 ரன்னில் வெளியேற சண்டிமால் 54 (46பந்து), ஆஷென் பண்டாரா 44 (35பந்து) ரன் எடுத்தனர்.
பின்னர் 132 ரன் இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்மன்ஸ் 26, லீவிஸ் 21, கிறிஸ் கெய்ல் 13, கேப்டன் பொல்லார்ட் 0, பூரன் 23, ரோவ்மன் பவல் 7, டுவைன் பிராவோ 0 என ஆட்டம் இழந்தனர். 105 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் கடைசி 2 ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அகிலா தனஞ்செயா வீசிய 19 வது ஓவரில், பேபியன் ஆலன் 3 சிக்சர் உள்பட 21 ரன் விளாசினார். இதனால் 19 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என தொடரை கைப்பற்றியது. 6 பந்தில் 3 சிக்சருடன் 21 ரன் எடுத்த ஆலம் ஆட்டநாயகன் விருது பெற்றார். அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி வரும் 10ம்தேதி நடக்கிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் இன்று மாலை பஞ்சாப் - ஐதராபாத் மோதல்
அமித், லலித் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது டெல்லி
சென்னையில் இன்று மோதல்: டெல்லியை சமாளிக்குமா மும்பை?
45 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சாம்கரனின் பந்துவீச்சு அற்புதம்...கேப்டன் டோனி பாராட்டு
பிரெஞ்ச் ஓபனில் ஆடுகிறேன்: ரோஜர் பெடரர் உறுதி
ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!