கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து தீ வைப்பு-பொதுமக்கள் தர்ணா
2021-03-08@ 14:28:12

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து, மர்ம நபர்கள் தீ வைத்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில், காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் ஆட்டோ டயரை மாலையாக அணிவித்து, அதற்கு தீ வைத்துள்ளனர். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பெரியார் சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மகாராஜாகடை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்