புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுக்கு பாஜக தொடர் அழுத்தம்!: தனி விமானத்தில் டெல்லிக்கு வர ரங்கசாமிக்கு அமித்ஷா அழைப்பு..!!
2021-03-08@ 12:38:14

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறுவதை தடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சி, என்.ரங்கசாமியை டெல்லிக்கு வரவும் அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தம்மை அறிவிக்க பாஜக மறுப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்திக்க ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டால் பாஜக கூட்டணி பெறும் தோல்வி அடையும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் என்.ஆர்.காங்கிரஸை கூட்டணியில் தக்கவைக்க பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது.
தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி வந்த பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது ரங்கசாமியுடன் வீடியோ காலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரை தனி விமானம் மூலம் டெல்லிக்கு வரும் படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ரங்கசாமியின் கோரிக்கைகளை டெல்லியில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று அமித்ஷா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அமித்ஷாவின் அழைப்புக்கு ரங்கசாமி இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார்.
மேலும் செய்திகள்
கோயில் திருவிழா நடத்தலாம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: பாஜ தலைவர் எல்.முருகன் சொல்கிறார்
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் பழுது: திமுக வேட்பாளர் புகார்
அதிமுகவினர் திடீர் மாயம் கொமதேக ஈஸ்வரன் சந்தேகம்
ஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளை மண்டபத்தில் தங்க வைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு முதல்வர் உத்தரவு
சொல்லிட்டாங்க...
சீருடைப்பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!