SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோதல்?

2021-03-08@ 11:52:07

சென்னை: அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ் நிபந்தனையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுப்பதால் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுக்கு பாதி என சரிசமமாக வேட்பாளர்களை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பழனிச்சாமி பங்கேற்கவில்லை. முதல் பட்டியலில் இடம்பெற்ற 6 வேட்பாளர்களில் 3 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சண்முகநாதன், தேன்மொழி பெயர் முதல் பட்டியலிலேயே இடம்பெற்றது. எடப்பாடி ஆதரவாளர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பெயர்கள் மட்டுமே முதல் பட்டியலில் இருந்தது.

செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் பெயரே இடம்பெறாத நிலையில் நிலக்கோட்டை வேட்பாளராக தேன்மொழியை பன்னீர்செல்வம் அறிவித்தார். இருவரும் சேர்ந்து கையெழுத்து இட்டால் தான் இரட்டை இலைச்சின்னம் கிடைக்கும். முதல் பட்டியலில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், அன்வர்ராஜா போன்ற முன்னோடிகள் பெயர் இல்லை. 50:50 ஃபார்முலா காரணமாக முன்னோடிகள் பெயர் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 50:50 ஃபார்முலாவால் எடப்பாடி பழனிசாமியை நம்பி இருந்த ஆதரவாளர்கள் திடீர் திருப்பத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஓ.பி.எஸ் பங்கில் வேட்பாளர் ஆவதற்காக ஏராளமான அதிமுகவினர் அவரது வீட்டுக்கு படையெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்