ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
2021-03-08@ 11:00:49

வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதிபர் பைடனின் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று மற்றும் அதனால் நிகழும் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது.
இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை உள்ளடக்கிய சுமார் 139 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க மீட்பு திட்டம் என்ற திட்டத்தை அதிபர் ஜோ.பைடன் முன்மொழிந்திருக்கிறார்.
செனட் சபையில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியின் 50 உறுப்பினர்களும், எதிராக குடியரசு கட்சிகளின் 50 உறுப்பினர்களும் வாக்களித்தனர். செனட் சபை தலைவரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அடுத்தகட்டமாக இந்த மசோதா ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர அதிபர் ஜோ.பைடன் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் செய்திகள்
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் யோஷிஹைட் சுகா..!!
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள்...14.44 கோடி பேர் பாதிப்பு....30.70 லட்சம் பேர் பலி!!
தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பலி: இலங்கை அரசு அதிர்ச்சி
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதா? போலீஸ் காவலில் புறா! வழக்கு பதிய பஞ்சாப்பில் ஆலோசனை
இந்தோனேஷியாவில் 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயம்
மபி.யில் கணவருக்கு இறுதிச் சடங்கு சீனாவில் இருந்து வீடியோவில் பார்த்து கதறி அழுத மனைவி
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்