பிரேசிலில் பிடியை இறுக்கும் கொரோனா வைரஸ்!: அமெரிக்காவை விட தினசரி தொற்று 2 மடங்கு அதிகம்..ஒரே நாளில் 1054 பேர் பலி..!!
2021-03-08@ 10:10:44

பிரேசில்: பிரேசிலில் கொரோனா பரவல் அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், பெருந்தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை அந்நாட்டு அரசு மீண்டும் கடுமையாக்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றின் விழுக்காடு குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 75 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று நேற்று 41,954 ஆக குறைந்துவிட்டது. அமெரிக்காவில் தொற்று குறைந்து வந்தாலும் பிரேசிலில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அங்கு ஒரேநாளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1054 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ஜீன் தெரிவித்ததாவது, குழந்தைகளை கடைகளுக்கு ஏன் கூட்டிச் செல்லக்கூடாது என்று மக்கள் கேட்கின்றனர். கண்ணுக்கு தெரியாத எதிரி உடனான போரில் உள்ளோம் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் பரவி வரும் கிருமி தொற்றை குறைக்கும் பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என குறிப்பிட்டார்.
கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாக சாப்பாலோ நகரத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரேநாளில் 18 ஆயிரத்து 691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 99 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள கொரோனா 1 லட்சத்து 57 ஆயிரத்து 890 உயிர்களை பறித்து சென்றுள்ளது.
மேலும் செய்திகள்
புத்தாண்டுக்காக ராணுவ அரசு முடிவு மியான்மரில் 23,000 கைதிகள் விடுதலை
அமெரிக்காவில் பார், மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 3 பேர் காயம்
கொரோனா தொற்று அதிகரிப்பு: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்
இரட்டிப்பு வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது..! 30.23 லட்சம் பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி
விண்ணில் 6 மாத ஆய்வுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்