தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து: சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி
2021-03-07@ 03:27:58

நாகர்கோவில்: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் சொந்த மாவட்டத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ.க்களும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தல் வாக்கு சாவடிக்குள் பணியில் இருக்கும் வருவாய்த்துறை, கல்வித்துறையை சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்யாத தேர்தல் ஆணையம், காவல்துறையினரை மட்டும் தூக்கியடித்து பழி வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
காவல்துறையினரின் இந்த அதிருப்தி தேர்தல் ஆணையத்தை எட்டியது. இதையடுத்து தற்போது சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் எஸ்.ஐ.க்களை இடமாற்றம் செய்ய வேண்டாம். சொந்த தொகுதியில் பணியில் இருந்தால் மாற்றுங்கள் என கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் 241 சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டு இருந்தார்.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களில் இருந்தும் 70 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இதே போல் ஆயுதப்படையில் 6 பேரும் மாற்றப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு பதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து எஸ்.ஐ.க்கள், குமரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்கனவே பணியில் இருந்த காவல் நிலையங்களில் பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சித்திரை திருவிழா இன்று தொடக்கம்: அழகர்கோயில் வளாகத்தில் நாளை சுவாமி புறப்பாடு
பஸ்களை நிறுத்த, தங்க வசதியில்லாததால் பஸ் மேற்கூரையில் தூங்கிய டிரைவர், கண்டக்டர்கள்
இரவு நேர ஊரடங்கு எதிரொலி: கரூரில் பல கோடி ரூபாய் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு..! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு
கொரோனா தொற்றால் நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
801 வகையான பயன்பாட்டு பொருட்களை அளிக்கும் பனைமரம்: கருப்பட்டியை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை.!!!
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்