SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படத்துடன் 3,030 நோட்டு புத்தகங்கள் பறிமுதல்: கரூர் அருகே பறக்கும் படை அதிரடி

2021-03-07@ 03:22:33

கரூர்: கிருஷ்ணராயபுரம்  தொகுதிக்குட்பட்ட சணப்பிரட்டி பகுதியில் உள்ள கேசவன் என்பவரின் வீட்டில்   ஜெயலலிதா, முதல்வர் எடிப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆகியோர் படம் பொறித்த நோட்டு புத்தகங்கள் மறைத்து வைத்திருப்பதாக  மணிமேகலை தலைமையிலான பறக்கும் படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல்  வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள், கேசவன் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், அமைச்சர் மற்றும் அதிமுக தலைவர்கள்  படம் பொறித்த 3,030 நோட்டுக்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து,  மாயனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பென்சில் பெட்டிகள் பறிமுதல்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் பறக்கும் படை அதிகாரி ஜான்சிராணி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் 3 அட்டை பெட்டிகளில் 640 பென்சில்கள் வீதம் 1920 பென்சில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு வநியோகம் செய்ய எடுத்து வந்தது தெரியவந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

  • 22-04-2021

    22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்