திமுக எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலை மிரட்டல்
2021-03-07@ 03:20:35

நாகர்கோவில்: தொலைபேசியில் அழைத்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருந்து வருவதுடன் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறேன். 10 ஆண்டுகள் தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளேன்.
கடந்த 4ம் தேதி மாலை 4 மணிக்கு எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் நான் எழுத்தாளர் மூர்த்தி, மேல்மருவத்தூரில் இருந்து பேசுவதாக சொல்லி என்னை அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசி மிரட்டினார். மீண்டும் மீண்டும் பல முறை மூன்று வெவ்வேறு போன் எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது ஏன்?.. கமல்ஹாசன் கேள்வி
சொல்லிட்டாங்க...
தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்