ஆண்டிபட்டி பகுதியில் கொய்யாவில் அம்மை புள்ளி நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
2021-03-06@ 14:34:05

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கொய்யாக்காய்களில் கத்தாளப் பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, சித்தார்பட்டி, வெண்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொய்யா தோப்புகள் அதிகமாக உள்ளன.
இப்பகுதியில் விளையும் கொய்யாக் காய்களை தேனி மற்றும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேந்த வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். மாதந்தோறும் வருவாய் தரும் கொய்யா தோப்புகளை, விவசாயிகள் 5 முதல் 10 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொய்யாக்காய்களில் கத்தாள பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது; மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கொய்யாக்காயை ரூ.30 முதல் ரூ.40 வரை வாங்கிய வியாபாரிகள், தற்போது நோய் தாக்குதலால் ரூ.15 முதல் 20 வரையே வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி கலைச்செல்வன் கூறியதாவது: கொய்யாக்காயில் கத்தாளப் பூச்சி, அம்மை புள்ளி நோய் தாக்கத்தால் வியாபாரிகள் விலை குறைவாக வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
திருச்சுழி பெரிய கண்மாயை ஆக்கிரமித்த கருவேலம் மரங்கள் விவசாயத்திற்கு போடுது முட்டுக்கட்டை-தூர்வார விவசாயிகள் கோரிக்கை
சிவகாசி பகுதிகளில் பயன்பாட்டில் பாலிதீன்: தடை இருந்தும் தாராளம்-உணவுத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
மேட்டுமகாதானபுரத்தில் லாரியில் இருந்து சாலையில் சிதறும் கலவை மணலால் டூவீலர்கள் சறுக்கி விபத்து அபாயம்
நெகமத்தில் குதிரை பந்தயம்
கிணத்துக்கடவு அருகே நரிக்குறவர் காலனியில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர கோரிக்கை
தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை சரிகிறது-விவசாயிகள் வேதனை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்