மெரினாவில் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா நினைவிடம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
2021-03-06@ 03:14:41

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது. நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலை பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
ஊரடங்கால் இரவு 9 மணியுடன் கடைகள் மூடப்படும்: மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 3.90 கோடி அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு
கண்ணூரில் இருந்து சென்னை வந்தபோது மாஸ்க் அணிய மறுத்து விமானத்தில் தகராறு: கேரள பயணி போலீசில் ஒப்படைப்பு
சர்ச்சில் பிரார்த்தனை செய்தபோது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது