வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2021-03-06@ 03:13:36

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: வாகன சோதனையில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம், பரிசு பொருட்கள் என இதுவரை 15.20 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் 14.13 கோடி. இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் 8ம் தேதி தமிழகம் வருகின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் அதிகம் செலவு செய்யும் தொகுதிகள் மற்றும் பண நடமாட்டம் குறித்து கண்டறிவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகளவில் பணம் எடுப்பவர்கள் மற்றும் அடிக்கடி பணம் எடுப்பவர்கள் அல்லது ஒரே நபருக்கு பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வருவதை கண்காணித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கூகுள் பே, போன் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பது தொடர்பாக வங்கிகள் மூலமாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்!: நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!!
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்: 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!
ஊரடங்கால் இரவு 9 மணியுடன் கடைகள் மூடப்படும்: மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 3.90 கோடி அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு