ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை
2021-03-05@ 17:48:54

கோவா: 11 அணிகள் பங்கேற்ற 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி, கொல்கத்தா, கவுகாத்தி, எப்சி கோவா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில், லீக் சுற்றில் முதல்இடம் பிடித்த மும்பையும், 4வது இடத்தை பிடித்த கோவாவும், மற்றொரு அரையிறுதியில் 2வது இடத்தை பிடித்த கொல்கத்தாவும், கவுகாத்தியும் மோதுகின்றன. தலா 2 என 4 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கிறது. அரையிறுதி முதல் சுற்றில், மும்பை சிட்டி எப்சி- எப்சி கோவா அணிகள் இன்று மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு, மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், 7ல் கோவா, 5ல் மும்பை வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டி டிராவில் முடிந்தன. நடப்பு சீசனில் லீக் சுற்றில் மோதிய 2 போட்டிகளில் ஒன்றில் மும்பை வென்ற நிலையில், மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. இந்த இரு அணிகளும் வரும் 8ம் தேதி மீண்டும் அரையிறுதி 2வது சுற்றில் மோதும். 2 போட்டியின் முடிவில் அதிக வெற்றி பெற்றஅணி பைனலுக்கு தகுதிபெறும்.
மேலும் செய்திகள்
சென்னையில் இன்று மாலை பஞ்சாப் - ஐதராபாத் மோதல்
அமித், லலித் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது டெல்லி
சென்னையில் இன்று மோதல்: டெல்லியை சமாளிக்குமா மும்பை?
45 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சாம்கரனின் பந்துவீச்சு அற்புதம்...கேப்டன் டோனி பாராட்டு
பிரெஞ்ச் ஓபனில் ஆடுகிறேன்: ரோஜர் பெடரர் உறுதி
ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்