அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!
2021-03-05@ 10:37:24

சென்னை : சென்னையில் இன்று தங்கம் விலை இன்று 288 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...
சென்னையில் இன்று (மார்ச் 5) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,181 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,227 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்துள்ளது.
அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 288 ரூபாய் குறைந்து 33,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.70.40 ஆக இருந்தது. இன்று அது ரூ.69.80 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
தங்கம்மேலும் செய்திகள்
தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் ரூ.264 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி
காலையில் அதிகரித்த நிலையில் தங்கம் விலை மாலையில் குறைந்தது
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி 9 லட்சம் கோடி இழப்பு
நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோடை வெப்பத்தால் 15 லட்சம் கோழிகள் சாவு: முட்டை விலை தொடர்ந்து உயர்வு
இனி நகை வாங்குறது ரொம்ப கஷ்டம் தான் போல. விலை 176 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது... .
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்