போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை: மியான்மரில் ராணுவம் அட்டூழியம்
2021-03-05@ 01:42:11

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று முன்தினம் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது ராணுவமும், போலீசும் அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் 6 பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே 50 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா.கூறி இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 பேரை ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவத்தின் இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆனால், 38 பேர் கொல்லப்பட்டதாக நேற்று திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மியான்மருக்கான ஐநா சிறப்பு தூதர் கிரிஸ்டின் ஸ்ச்ரேனர் பர்ஜினர் கூறுகையில், “பிப்ரவரி 1ம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல் இதுவாகும். இது, ரத்தகளரியான நாள். ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்,” என்றார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்லும் பயணிகள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரான்ஸ் அரசு உத்தரவு
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொலை.. டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு : 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு!!
பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணம் : உலக அளவில் இதுவரை 30.56 லட்சம் பேர் உயிரிழப்பு!!
இந்தியா போகாதீங்க..! அமெரிக்கா எச்சரிக்கை
முஸ்லிம் நாட்டினருக்கு தடை கொஞ்சம் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்: பைடனுக்கு டிரம்ப் அறிவுரை
கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட சோதனையை நடத்த இந்தியாவிடம் அனுமதிகோரும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்..!!
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!