நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்!!
2021-03-04@ 15:49:59

புதுடெல்லி :நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் எது என்ற ஆய்வில் தமிழகத்தின் சென்னைக்கு 4வதும், அதேப்போன்று கோவைக்கு 7வது இடம் என்ற அங்கீகாரம் கொண்ட பட்டியலை வழங்கி மத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிறந்த இடங்களை வீட்டு வசதி மற்றும் நகா?ப்புற வளா?ச்சி அமைச்சகம் நடத்துகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி டெல்லியில் அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,' சுமார் 10லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில் சென்னைக்கு 4வது இடமும், கோவைக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:
மக்கள் வாழ சிறந்த நகரம்மேலும் செய்திகள்
இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!!!
கொரோனா தாக்கம் எதிரொலி: ராகுல், மம்தாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தார் பிரதமர் மோடி.!!!
கர்நாடகாவில் நிலைமை கை மீறிபோய்விட்டது..! கொரோனாவில் இருந்து 2வது முறையாக குணமடைந்த முதல்வர் எடியூரப்பா பேட்டி
பெங்களூருவில் கொரோனாவால் தினமும் சுமார் 100 பேர் உயிரிழப்பு: மயானங்களில் குவியும் உடல்கள்
விமானங்களை பயன்படுத்துங்க: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு.!!!
இந்தியாவில் தயாராகிறது மேலும் ஒரு தடுப்பூசி : இறுதிக்கட்ட சோதனையில் பயோலொஜிக்கல் -இ தடுப்பூசி!!
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்