செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..!!
2021-03-04@ 12:55:31

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார் ஷிப்' ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய 'ஸ்டார் ஷிப்' விண்கலத்தின் முன்மாதிரி நேற்று அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய 'ஸ்டார் ஷிப்' பின்னர் சிறிய தடுமாற்றத்துடன் தரையிறங்கியது. ஆனால் நிலத்தை தொட்ட சில நொடிகளில் ராக்கெட் தீப்பிடித்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. 3 என்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்ததே விண்கலம் வெடித்து சிதற காரணம் என்று கூறப்படுகிறது. ராக்கெட் வெடித்துள்ள போதும் தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக மனிதர்களை அனுப்பும் தனியார் நிறுவனம் என்ற பெயரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நிலவுக்கும் , செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு. இந்த திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் ஸ்டார்ஷிப் ராக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்லும் பயணிகள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரான்ஸ் அரசு உத்தரவு
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொலை.. டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு : 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு!!
பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணம் : உலக அளவில் இதுவரை 30.56 லட்சம் பேர் உயிரிழப்பு!!
இந்தியா போகாதீங்க..! அமெரிக்கா எச்சரிக்கை
முஸ்லிம் நாட்டினருக்கு தடை கொஞ்சம் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்: பைடனுக்கு டிரம்ப் அறிவுரை
கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட சோதனையை நடத்த இந்தியாவிடம் அனுமதிகோரும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்..!!
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!