தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா!!
2021-03-04@ 12:31:36

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை கழகத்தில் இன்று (04.03.2021) விருப்பமனு வழங்கினார். உடன் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.க்ஷி.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.ஸி.மோகன்ராஜ், கழக துணை செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ், திரு.ப.பார்த்தசாரதி,ணிஜ்:விலிகி., மற்றும் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட, மகளிர் அணி, பகுதி, வட்டம், மற்றும் தொண்டரகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேமுதிக விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்தனர். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்த தேமுதிக தொண்டர்கள், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூரில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்ப மனுவை அளித்துள்ளார் பிரேமலதா. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
Tags:
பிரேமலதாமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு
புகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு அதிகளவு தடுப்பூசிகள்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகள் இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்
வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்