உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது
2021-03-04@ 00:17:21

வேளச்சேரி: தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சரத்சந்தர்(41), பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக தரமணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜாபர்கான்பேட்டை எஸ்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த அந்தோணி(39) என்பவர் ஏமாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்தோணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், அந்தோணி உலக வங்கி அருகில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவர் பலரிடம் உலக வங்கியில் வேலை செய்வதாக கூறி ஏமாற்றி அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியதாகவும் தெரியவந்தது. மேலும், சமீபத்தில் தரமணியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு கடத்திய ₹45 லட்சம் மதுபாட்டில்கள் கார்களுடன் பறிமுதல்-4 பேர் அதிரடி கைது
ஈரோட்டில் சிறுவர்களை நரபலி கொடுக்க முயன்ற புகாரில் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 5 பேர் கைது
வேறு நபருடன் பேசியதால் ஆத்திரம்!: புதுச்சேரி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலன்..!!
கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட 1,382 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு ரூ.48 லட்சம் மோசடி வழக்கில் மாமியார், மருமகன் கைது: பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை
நண்பரை கொலை செய்த வாலிபர் கைது மது போதையில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதால் அடித்து கொன்றேன்: பரபரப்பு வாக்குமூலம்
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!