ராசிபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியா?: பாஜக சுவர் விளம்பரத்தால் அதிமுகவினர் கடும் அதிருப்தி..!!
2021-03-03@ 11:56:10

நாமக்கல்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தற்போது வரை முடிவாகாத நிலையில் ராசிபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் பாஜக-வினர் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை வேட்பாளர் என்று அறிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். இது அதிமுக-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மண்டலத்தில் அதிமுகவினருக்கு சாதகமாக அதுவும் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏக்களின் தொகுதிகளை பாரதிய ஜனதா கேட்பதாக அதிமுக-வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு
போடாதவருக்கு போட்டதாக கணக்கு காட்டி புது மோசடி? கொரோனா ெடஸ்ட் எடுத்தவருக்கு கோவாக்சின் போட்டதாக மெசேஜ்: வத்தலக்குண்டுவில் வசிக்கும் சென்னை இன்ஜினியர் ‘ஷாக்’
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 6 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் விவரம் சேகரிப்பு: குளறுபடிகளை தவிர்க்க நடவடிக்கை
பாளை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ஒருவர் அடித்துக் கொலை: 3 பேர் படுகாயம்
மதுரை சித்திரை திருவிழா மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்: நாளை திருக்கல்யாணம்
‘குட்டி ஜப்பானை’ மீண்டும் குறிவைக்கிறது கொரோனா பட்டாசு உற்பத்தி பாதிக்குப்பாதி குறையும்?: வடமாநில ஆர்டர்கள் குறைவு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!