மெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்
2021-03-03@ 00:39:31

சென்னை: மெட்ரோ ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்தநிலையில், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை தொடங்கப்பட்ட பிறகு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
இதேபோல், 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், க்யூ-ஆர் கோடு முறையை பயன்படுத்தி 1.50 லட்சம் பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 34 லட்சத்து 64 ஆயிரத்து 850 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில் க்யூ-ஆர் கோடு பயணச்சீட்டை 40,850 பேரும், பயண அட்டையை 9,84,665 பேரும் பயணம் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம்: டூ வீலர் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் அதிரடி
கொரோனா பரவல் எதிரொலி: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
சென்னையில் நிரம்பி வழியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்; ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்
கோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தகவல்
பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்படும் -போக்குவரத்துத்துறை விளக்கம்
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!