3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்
2021-03-03@ 00:28:36

வெலிங்கடன்: நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 3வது டி20 போட்டி, வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் 53 ரன் வித்தியாசத்திலும், டுனெடினில் நடந்த 2வது போட்டியில் 4 ரன் வித்தியாசத்திலும் வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணியும், வாய்ப்பை தக்கவைக்க ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுகின்றன.
ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மார்ச் 5ல் ஆக்லாந்தில் நடக்க வேண்டிய 4வது போட்டியும் வெலிங்டனிலேயே நடைபெறும். மார்ச் 7ல் தவுரங்காவில் நடக்க இருந்த 5வது போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடக்கும். கடைசி 3 போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அடுத்து வங்கதேசத்திற்கு எதிராக நடக்க உள்ள தொடரும் (3 டி20, 3 ஒருநாள்) ஒரே நகரில், பூட்டிய அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் கோஹ்லி படை..!
பஞ்சாப்பை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்; பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் வார்னர் பாராட்டு..!
சென்னைக்கு எதிராக கொல்கத்தா போராடி தோல்வி: கடைசி வரை கடும் சவால் அளித்ததில் மகிழ்ச்சி; கேப்டன் மோர்கன் பேட்டி
சிஎஸ்கே போராடி வெற்றி
9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி அசத்தல் வெற்றி கணக்கை தொடங்கியது சன்ரைசர்ஸ்: 5வது இடத்துக்கு முன்னேற்றம்
பெங்களூர் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்