SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் இருந்து பறந்து வந்த உத்தரவால் சிசிடிவி ஆதாரங்களை அழித்த காக்கிகளின் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-03@ 00:17:15

‘‘பெண் காக்கி அதிகாரியை அலைக்கழித்த காட்சிகளை அழிக்கப்பட்டதாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.


‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி டோல்பிளாசா அருகேதான் காரிலிருந்து பெண் எஸ்பி தப்பித்துச்சென்றாராம். இதனால், காரிலிருந்து இறங்கி ஓடும் காட்சிகளும், நீண்டநேரம் கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காட்சிகளும் டோல்பிளாசை தாண்டியுள்ள ஓட்டல் உள்ளிட்ட கடைகளின் முன்பகுதியில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகியிருந்ததாம். ஆனால், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கூடுதல் டிஜிபி உள்ளூர் ஸ்டேஷன் காக்கிகளை தொடர்பு கொண்டு, டோல்பிளாசாவிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கழற்ற சொல்லி உள்ளாராம். மேலும், யார் வந்து கேட்டாலும் இங்கு கேமரா பொருத்தப்படவில்லை என்று தகவலைச் சொல்லச்சொல்லி மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘செய்யாற்றில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ... பணம் கொட்டும் ஆறாக மாறிவிட்டதாக மக்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘செய்யாறு சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில செய்யாறும், பாலாறும் ஓடுது. ஆனால் காக்கிங்க ஆற்றுல தண்ணீ போனா என்ன... போகாவிட்டால் என்ன... எங்களுக்கு தேவை பணம்... மண்ணை எடுத்துக்கோங்க... பணத்தை கொடுத்துட்டு போங்கனு கறாரா சொல்றாங்களாம். ஆற்று மணல்ல பணம் கொட்டுவதால்... இந்த பகுதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்துட்டு டிரான்ஸ்பர் வாங்க காக்கிகள் தயாராக இருக்காங்களாம். இப்படி அரசகுப்பம், செட்டிதாங்கல், தாலிக்காலு கிராமங்கள்ல கடத்தல் ஓஹோன்னு போகுதாம். ஒரு நாள் நைட்டுக்கு மட்டும், 18 லாரிகள்ல மணல கடத்துறாங்களாம். நைட் 10 டூ மார்னிங் 7 மணி வரைக்கும், ஒரு லாரிக்கு, தலா 5 லோடு மணல் கடத்துறாங்களாம். ஒரு லாரிக்கு 15ஆயிரம் மாமூல் கொடுக்கணுமாம். கடத்தல் கும்பலும் கரெக்டா, மாமூல் கொடுத்துடுறாங்களாம். இந்த அண்டர் டீலிங் தெரியாத பொதுமக்கள், காவல்நிலையத்துக்கு புகார் செஞ்சா, அது குப்பை தொட்டியில இருக்காம்.. புகார் கொடுத்தவர் நடவடிக்கை எடுக்கக் கோரி நச்சரித்தால்... அவரின் நம்பரை மணல் மாபியா கிட்ட கொடுத்து, புகார் கொடுத்தவனை கவனிக்க சொல்லிடறாங்களாம். அதோட, இந்த மணல் கடத்தல்ல மணல் அள்ளிப்போடுறதுக்கு பெண் பணியாளர்களையும் நியமிச்சிருக்காங்களாம். இப்படி செய்யாறு சப்-டிவிஷன்ல ஆத்துல ஓடுற மணலை, பணமா மாத்துறாங்களாம். இப்படியே போச்சுன்னா, ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காதுனு கண்ணீர் விட்டு அழறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ராமநாதபுரத்துல உட்கட்சி பூசல் உச்சத்துல இருக்காமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடவுள் பெயரில் துவங்கும் மாவட்டத்தில், மரியாதையை குறிக்கும் சொல்லுடன் துவங்கும் தொகுதியில், ஆளுங்கட்சியினரிடையே உள்கட்சி பூசல் எகிறி நிற்கிறதாம்... இங்கே முன்னாள் செயலாளரும், தற்போதைய ஒன்றிய செயலாளரும் போட்டியிட விருப்ப மனு செய்திருக்கின்றனர். இதில் புதுக்குழப்பமாக திடீரென ‘‘முருகப்பெருமான்’’ பெயர் கொண்டவரும் மனு கொடுத்திருக்கிறாராம்... இவர் விருப்ப மனு தாக்கல் செய்ததற்கு, தற்போதைய ஒன்றியம்தான் முக்கிய காரணமாம்.... இதனால் இலைக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்திருக்கிறதாம். இதற்கெல்லாம் ‘‘ஆப்பு’’ வைக்கும் விதமாக, சமீபத்தில் நடந்த தாமரைக்கட்சியினர் நடத்திய கூட்டத்தில், தொகுதியை தங்களுக்கே ஒதுக்கி விட்டதாக அந்த கட்சியினர் உறுதி செய்தது போல பேசி விட்டு சென்றிருக்கிறார்களாம். கூட்டணி குழப்பத்தில் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில், உள்கட்சியிலேயே பூசல் அதிகரித்திருப்பதும் தொகுதியில் ஆளுங்கட்சியினரை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எஸ்பி மாறியதால மணல்ல பணம் பார்க்கும் கூட்டத்தை பற்றிச் ெசால்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல மணல்கொள்ளை கொடி கட்டி பறந்துச்சு. இதற்கிடையில தான். முருகர் பெயர கொண்ட எஸ்பி, குயின்பேட்டைக்கு பணியிட மாற்றமாகி வந்தாரு. இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டு, போராட்டத்துல, ஈடுபட்ட மாணவர்கள் கிட்ட பேசி, போராட்டத்தை நல்ல முடிவுக்கு கொண்டு வந்தாரு. இந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல பரவி, இவர் பேமஸ் ஆகிட்டாரு. அதேசமயம் பணிகளையும் இவர் சிறப்பா செஞ்சதாலே மக்கள் கிட்ட இவருக்கு நல்ல பேரு கிடைச்சது. இதற்கிடையில கடந்த வருஷம், குயின்பேட்டை எஸ்பியாக டிரான்ஸ்பர் ஆகி வந்தாரு. இவர் வந்த உடனே, குயின்பேட்டை முழுவதுமாக மணல் கடத்தல், சூதாட்டம்னு சமூக விரோத செயல்கள்ல ஈடுபடுறவங்க லிஸ்ட் வாங்கி, அடக்கி வச்சிட்டாரு. இதனால, காக்கிங்க, வருவாய் துறையைச் சேர்ந்தவங்களும் மணல்ல பணம் பார்க்க முடியாம தவிச்சு வந்தாங்களாம். இப்படி கரன்சிய பாக்காம கடுப்பாகி கிடந்த வருவாய் துறையும், காவல்துறையும் இப்ப, ஹேப்பியா துள்ளி குதிக்கிறாங்களாம். அதுக்கு காரணம், எஸ்பி பணியிடமாற்றமானதுதானாம். எஸ்பி மாற்றப்பட்டதால, இப்ப திரும்பவும் பழையபடி, மணல் கடத்தல், சூதாட்டம்னு குயின்பேட்டையில கொடிகட்டி பறக்கத்தொடங்கிடுச்சாம். காக்கிகள், வருவாய்துறையினர் கரன்சி மழையிலேயே நனைய தொடங்கிட்டாங்களாம். புதுசா வந்திருக்குற எஸ்பியும் வந்த உடனே, பாதுகாப்பு பணிக்காக ஒருவாரம் சென்றுவிட்டாராம். இதனால, குயின்பேட்டை மாவட்டம் தண்ணி தெளிச்சு விட்ட மாவட்டம் மாதிரி ஆயிடுச்சேன்னு நேர்மையான அதிகாரிங்க பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

 • 22-04-2021

  22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்