கர்நாடகா அமைச்சர் பெண்ணுடன் உல்லாசம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
2021-03-03@ 00:16:55

பெங்களூரு: கர்நாடகா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசில், நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜார்கிஹோளி. காங்கிரசில் முக்கிய பொறுப்புகளிலும், எம்எல்ஏ.வாகவும் இருந்த இவர், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் பாஜ.வில் இணைந்தார். காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை பாஜ கவிழ்த்ததில் இவரும் முக்கிய பங்காற்றினார். பின்னர், இடைத்தேர்தலில் பாஜ சார்பில் கோகாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு நீர்ப்பாசனத் துறையை எடியூரப்பா வழங்கினார்.
இந்நிலையில், இவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கள்ளப்பா என்பவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இதற்கு முன்பு அமைச்சர்கள் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்த சர்ச்சை எழுந்துள்ளது. இப்போது, ரமேஷ் ஜார்கிஹோளி பெண்ணுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவு
மைசூரு சாமுண்டி கோயிலுக்கு அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி சென்றுள்ளார். அதே நேரம் உல்லாச வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், மீடியாக்கள் அவரை தேடின. யார் கண்ணிலும் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மைசூருவில் இருந்து தப்பியோடிய அவர், தற்போது தலைமறைவாகி விட்டார். பெலகாவி மாவட்டம், கோகாக் தொகுதியில் தான் இந்த உல்லாச வீடியோ முதலில் வெளியானது. இது குறித்து சமூக சேவகர் கள்ளப்பா கூறுகையில், ‘‘அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்ணை அமைச்சர் தனது விருப்பத்துக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்