வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
2021-03-02@ 10:19:26

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 12 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,24,527- ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 91 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,248 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,464 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,07,98,921- ஆக உயர்ந்துள்ளது.
* கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் இதுவரை 1,48,54,136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* குணமடைந்தோர் விகிதம் 97.07% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.51% ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் இதுவரை 21,76,18,057 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு
அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி
12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்
தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
கடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்