SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புடவையும் வேண்டாம்... ரொக்கமும் ேவண்டாம்னு தாமரை நிர்வாகியை துரத்திய மக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-02@ 00:53:42

‘‘மத்திய அமைச்சரின் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க சென்றவர்... பொதுமக்களிடம் டோஸ் வாங்கிக் கொண்டு திரும்பிய கதையை சொல்லுங்க...’’  என்றார் பீட்டர் மாமா. ‘‘காரைக்காலில் தாமரை சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. உள்துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டம் என்பதால்  மாஸ் காட்டுவதற்காக தாமரை தரப்பினர் முடிவு செய்திருந்தார்களாம். இதற்காக காரைக்கால் அடுத்த மானாம்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த  மக்களிடம் பணம், புடவை , சரக்கெல்லாம் உங்களுக்கு தர்றோம். மத்திய உள்துறை அமைச்சர் வந்துள்ளார். பொதுக்கூட்டத்துக்கு வாங்க என்று  கிருஷ்ணன் பெயரை கொண்ட தாமரை கட்சி பிரமுகர் ஒருவர் 4 வேன்களுடன் சென்றாராம்.

இந்த தகவலை கேட்டு சுதாரித்து கொண்ட அந்த பகுதி மக்கள் யாருமே வண்டியில் ஏற வில்லையாம். இதனால், டென்ஷனான கிருஷ்ணன்  பெயரானாவர் பொதுக்கூட்டம் நடைபெறும் எம்டி வேனுடன் திரும்பி வந்தாராம். அப்போது அங்கிருந்து முதற்கடவுள் பெயரை கொண்ட தாமரை  பிரமுகர் என்னாச்சு பொதுமக்கள் யாரும் வரவில்லையா என கிருஷ்ணன் பெயரானாவரிடம் கேட்டுள்ளார். அவரும் டென்ஷனாகி உச்சக்கட்டத்துக்கு  சென்று விட்டாராம். நான் சொல்வதாக கூறி போய் அழைத்து வா என்று கறாராக கூறி அனுப்பி வைத்தாராம். என்ன செய்வதென்று தெரியாமல்  கிருஷ்ணன் பெயர் கொண்டவர் மீண்டும் அதே பகுதிக்கு சென்றாராம். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் கூட்டத்திற்கெல்லாம் வரமுடியாது என்ன  பண்ணுவீங்க என கிருஷ்ணன் பெயரானவரை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனராம்... முகத்தை துடைத்து  கொண்டு... வெறும் வேனுடன் திரும்பினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முட்டை மாவட்டத்தில் இங்கிலீஸ்சை பார்த்து வாய் பிளந்தவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முட்டை மாவட்டத்தில்  தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினருக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் தேர்தல் விதிமுறைகள் குறித்து மாவட்ட  எஸ்பி, முழுக்க, முழுக்க ஆங்கிலத்திலேயே ேபசினாராம். இதனால் கூட்டத்திற்கு வந்தவர்கள், புரியுது ஆனால் புரியல என்ற ரீதியில் இருக் ைகயில் அமர்ந்து நெளிந்தார்களாம். கலெக்டர் அடுத்து பேசுவார் என்பதையும் ஆங்கிலத்திலேயே எஸ்பி சொன்னாராம். எஸ்பி பேசினதுதான் சரியா  புரியல. கலெக்டர் கண்டிப்பா தமிழில் தான் பேசுவாரு. அதனால் நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம் என்று ஆசுவாசமானார்களாம் பறக்கும்  படையினர்.

ஆனால் கலெக்டரும், எஸ்பி பாணியில் ஆங்கிலத்திலேயே பொளந்து கட்டியதால் ஆடிப்போயிட்டாங்களாம். ஒரு கட்டத்தில், ஒரு பெண் போலீஸ்  எழுந்து, ‘‘ஆம்புலன்ஸ் வந்தால், என்ன செய்யவேண்டும்’’ என்று கேட்கவே அதிர்ச்சி அடைந்த எஸ்பியும், கலெக்டரும் குட் கொஸ்டின் என மீண்டும்  ஆங்கிலத்திலேயே விளக்கம் கொடுத்தாங்களாம். முதல் கூட்டமே இப்படியா? என நொந்துபோனாங்களாம். சட்டமன்ற தேர்தல் பறக்கும் படையில்  நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் எஸ்எஸ்ஐ, கான்ஸ்டபிள், துணை தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்தான். இவர்களுக்கு புரியும்படி  தேர்தல் விதிமுறைகளை எளிய தமிழில் கூறினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று அவர்கள் பேசிய ஆங்கிலத்தை வாய் பிளந்து  பார்த்தபடியே பறக்கும்படை உட்கார்ந்து இருந்தாங்களாம்... அப்ப தமிழில் புகார் கொடுத்தால் அதை எப்படி படிப்பாங்க... எப்படி குறை தீர்ப்பாங்க என்று  கூட்டத்தில் இருந்தவர்களிடையே ஒரு பேச்சு ஓடிச்சாம்....’’என்றார் விக்கியானந்தா.

‘‘காஞ்ச மாவட்டத்துல முயல் கறி சாப்பிட்டு உடலை முறுக்கேற்றி வைத்திருக்கும் அதிகாரி பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடவுள்’’ பெயரில் துவங்கும் மாவட்டத்தில் இருக்கிறது ‘‘முதிய ஊருணி’’ என்ற பொருள் கொண்ட ஊர். இங்கு காக்கி துணை அதிகாரியாக இருப்பவர்,  இங்குள்ள பரம்பை ரோட்டின் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். காக்கி அதிகாரி என்பதால், இவரை  வளைத்துப்போட்டு காரிய மாற்றும் வகையில், கடைக்காரர்கள் தினமும் இவருக்கு ‘‘முயல் கறி’’ சமைத்து ருசியாக பரிமாறி வருகின்றனர்.

வெளிநாட்டில் படித்திருக்கிற இந்த அதிகாரிக்கு தடை செய்த காட்டுப்பறவைகள் உள்ளிட்டவைகளும் அவ்வப்போது பரிமாறப்படுவதாகவும் புகார்  இருக்கிறது. காக்கி அதிகாரி பெயரைச் சொல்லிக்கொண்டு, இரவு நேரங்களில் முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வேட்டைக்கு ஒரு கும்பல்  கிராமங்களின் காட்டுப்பகுதிக்குள் கிளம்பிச் செல்கிறதாம். இரவில் தலையில் டார்ச்லைட், கையில் வேட்டைநாய், கம்பு என வலம் வரும் கும்பலால்  இப்பகுதி கிராமத்தினரும் பீதியடைந்துள்ளனராம், ‘‘காக்கி அதிகாரிக்கு விருப்பமானது’’ எனக்கூறி, இவ்வூர் காவலர்கள் சிலரும், நாள் தவறாமல்  முயலுடன், காடை, கவுதாரி என்று காட்டுப்பறவைகளையும் ருசித்து வருகிறார்களாம். காட்டு விலங்குகள் வேட்டைக்கு தடை இருக்கிறபோது,  பாதுகாக்க வேண்டிய ‘‘காவல் அதிகாரி’’ பெயரிலேயே, இப்பகுதியில் நடந்து வரும் வேட்டையால் அரிய பல விலங்கினங்கள் அழிந்து வருகிறதாம்...  வாய் ருசிக்காக... உயிர் உள்ள ஜீவனை கொல்வது சரியா என்று மக்கள் புலம்பி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. <

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்