பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
2021-03-02@ 00:41:28

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன் (28). தற்போது தேர்தல் பறக்கும் படைப்பிரிவில், ஒரகடம் பகுதியில் பணியாற்றினார். நேற்று காலை வெங்கடேசன், வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஒரகடம் அடுத்த, கட்டவாக்கம் கூட்டு சாலையில் சென்றபோது, எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். அதேபோல், எதிர் திசையில் வந்து விபத்தை சந்தித்த வாலாஜாபாத் சந்தோஷ்குமாருக்கு (30), தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் தமிழ் (36). கடந்த சனிக்கிழமை தமிழ், சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு உறவினர்கள் பவானி, அருளம்மாள், ஆனந்தம்மாள் ஆகியோருடன், சென்னைக்கு காரில் புறப்பட்டார்.
சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஸ்ரீபெரும்புதூர் அருகே வீஆர்பி சத்திரம் பகுதியில் கார் டயர் பஞ்சரானது. காரை, சாலையோரமாக நிறுத்தி விட்டு, தமிழ் மற்றும் பவானி ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். அப்போது, அவ்வழியாக வந்த டாராஸ் லாரி, கார் மீது மோதியது இதில், தூக்கி வீசப்பட்ட பவானி, சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழ் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், தமிழை சிகிச்சைக்காகவும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ், நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின்படி போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்