மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
2021-03-01@ 17:44:01

மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிதாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ7 பிளஸ் மற்றும் மைக்ரோசாப்ட் ஹப் 2எஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் சர்பேஸ் புரோ 7பிளஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதமே அறிமுகம் ஆனது. இப்போதுதான் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. சர்பேஸ் புரோ 7பிளஸ், 12.3 அங்குல டிஸ்பிளே, 11வது தலைமுறை இன்டல் கோர் ஐ7 கொண்டது. எல்டிஇ வேரியண்டில் 11வது தலைமுறை ஐ5 பிராசஸர் இருக்கும். எல்டிஇ வேரியண்டில் 16 ஜிபி வரை ரேம், 256 ஜிபி ஸ்டேரேஜ், வைபை வேரியண்டில் 32 ஜிபி ரேம், ஒரு டெராபைட் ஸ்டோரேஜ் இருக்கும்.
சர்பேஸ் ஹப்2 எஸ் 85 அங்குல பிரமாண்ட 4கே தொடுதிரை, 8வது தலைமுறை இன்டல் கோர் ஐ5, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். ஆன்லைன் வகுப்புகள், வர்த்தக ரீதியான பயன்பாடுகளை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்பேஸ் புரோ 7பிளஸ் விலை ₹83,999 முதல் ₹2,58,499. சர்பேஸ் ஹப் 2எஸ் 85 அங்குலம் ₹21,44,999.
Tags:
மைக்ரோசாப்ட்மேலும் செய்திகள்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை!!!
பிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய பிறகு டிவிட்டை திருத்தும் வசதி வரப்போகுது: துட்டு கொடுத்தால் பெறலாம்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)