சொகுசு கார் திருட்டு
2021-03-01@ 03:27:50

ஆவடி: திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(44). கோடம்பாக்கத்தில் சுயமாக தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது சொகுசு காரில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டு வாசலில் தெரு ஓரம் காரை நிறுத்திவைத்திருந்தார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கார் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காரை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்பாபு, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடுகின்றனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்