SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!

2021-02-28@ 14:09:05

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்ததை அடுத்து, தன் ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏல்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணனைத் தவிர்த்து மற்றவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பல்வேறு நிர்வாகிகள் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது  சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் ''எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை மட்டும் என் சுய முடிவின்படி ராஜினாமா செய்கிறேன். இதனை இன்றே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்