SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் இரவோடு இரவாக பல லகரங்களை கறந்து பணி நியமனம் வழங்கப்பட்டதை சொல்கிறார்...wiki யானந்தா

2021-02-28@ 02:03:59

‘‘இரவோடு இரவாக பணி நியமனம் நடந்ததாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பிட்டர், குடிநீர் ஆபரேட்டர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 115 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களை தேர்தலுக்கு முன்பாக அவசர, அவசரமாக பூர்த்தி ெசய்ய பணி நியமன ஆணை வழங்கும் உதவி இயக்குநர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ராமன் பெயரைக் கொண்ட உதவி இயக்குநர் உடனடியாக வந்து பதவியேற்றுக் கொண்டார். அவர் நெல்லைக்கு வந்த சில நிமிடங்களில் அனைத்து ேபரூராட்சி செயல் அலுவலர்களையும் நெல்லை மண்டல அலுவலகத்திற்கு வர உத்தரவு பறந்தது.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் நடத்தை விதிகள் எதையும் பொருட்படுத்தாமல் அனைத்து செயல் அலுவலர்களையும் நள்ளிரவு வரை உட்கார வைத்து இரவோடு, இரவாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த ஒவ்வொரு பணியிடத்திற்கும் பல லகரங்கள் கறக்கப்பட்டதாம். அதனால் தான் தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே அவசர, அவசரமாக பணி நியமன ஆணைய வழங்கப்பட்டதாம். தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது மட்டும் வழக்குபதிவு செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், நடத்தை விதிமுறைகளை மீறி பணி நியமன உத்தரவு வழங்கிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என நெல்லையில் பரபரப்பு பேச்சாக கிடக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘புதுச்சேரியல மாம்பழ கட்சிய மதிக்கலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது.
அதிக இடங்களை ரங்கசாமி கேட்பதால் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. அதோடு பாஜகவுடனான கூட்டணிக்கு விருப்பம் இல்லாதவரை போல ரங்கசாமி விலகி செல்வதால், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
ரங்கசாமியை விட்டுவிட்டால், பாஜக போணியாகாது என்பதால், அவரை இழுத்து பிடிக்க தாமரை தரப்பு கடும் முயற்சி செய்கிறது. இந்த நேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மாம்பழம் கட்சியும் இரண்டு தொகுதிகள் வேண்டும் என வலியயுறுத்துகிறது.
புதுச்சேரியில் மாம்பழம் ஜூசில் போட்ட துண்டுகளை போல கரைந்து போய்விட்டது. 2 தொகுதியெல்லாம் கொடுக்க முடியாது என கறாராக தாமரை தரப்பு சொல்லிவிட்டதாம்.
ரங்கசாமி கூட்டணியில் இல்லாவிட்டால் பார்க்கலாம் என குண்டை தூக்கி வீசியிருக்கிறது. வேண்டுமானால் நியமன எம்எல்ஏ தருவதை பற்றி பிறகு பேசலாம் என கூறிவிட்டனராம். அதனையும் உறுதியாக சொல்ல முடியாது என முகத்தில் அடித்தார் போல கூறிவிட்டதாம்.
என்னப்பா.. தமிழகத்தில் நமக்கு இருக்கும் கவுரவம் புதுச்சேரியில் துளி கூட கிடையாதா? என அமைப்பாளர் தனமானவரு கட்சிக்காரர்களிடம் புலம்பி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மது விற்பனையில் ‘‘தூங்கா நகரத்து மண்டலம்’’ முதலிடம் பிடித்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கான முக்கிய காரணமும் இருக்கிறது. இந்நகரத்தில் மட்டுமல்ல. கிராமங்களிலும் 24மணி நேர தாராள மது விற்பனையால்தான், இச்சாதனையை ஒவ்வொரு முறையும் ‘‘மதுத்துறை’’ எட்டிப் பிடித்து வருகிறதாம். மாவட்டத்தில் திருமங்கலம், கூடக்கோவில், கல்லணை, சாத்தங்குடி, தங்களாசேரி, பன்னீர்குண்டு, எஸ்பிநத்தம், வெள்ளாகுளம் உள்ளிட்ட ஏகப்பட்ட பகுதிகளிலும் குறிப்பிட்ட டீக்கடைகள், மதுக்கடைகளாகவே மாறி கிடக்கிறது.
மிக்சிங், சைடிஷ் சேர்த்து தருவதால், கூட்டம் மொய்க்கிறது. ஒவ்வொரு முறையும் சாதனைக்கான பின்னணி இதுவாக இருக்கும்போது, இதனை தடுத்தாக வேண்டிய மது விலக்குத்துறையும், இத்தகவலை மேலிடத்திற்குத் தர வேண்டிய உளவுப்பிரிவும், இந்த கடைகளின் வாராந்திர ‘‘வருவாய்க்காக’’ கண்டுகொள்வதில்லையாம். இரவு, பகல் எந்நேரமும் டீக்கடைகளைத் தேடி வரும் குடிமகன்களால், பல கடைகள் இருந்தும், கிராமத்தினருக்கு டீ கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்...’’ என்கிறார் விக்கியானந்தா.
 ‘‘முட்டை மாவட்டத்தில் தாமரை
அதகளத்தால் இலை தரப்பு கடுப்பானதாமே..’’
 ‘‘முட்டை மாவட்டத்தில் கூட்டணியில் இருந்து கொண்டே தாமரை கட்சி காரங்க செய்யும் அதகளம், இலைகட்சி காரங்களை கடும் வெறுப்பில் ஆழ்த்துகிறதாம். இதில் இலைகட்சியின் ராசியான தொகுதியில், சிட்டிங் எம்எல்ஏவாக லேடி மினிஸ்டர் இருக்கிறார். இந்த தொகுதிக்கு தாமரைகட்சி நிர்வாகி ஒருத்தரு குறி வச்சிருக்கார் என்பதெல்லாம் பழைய தகவல். அந்த பிரமுகர், ஒரு படி மேலே போய் சுவர் விளம்பரம் செய்திருப்பது தான் கடுப்புக்கு காரணமாம். இலையின் கூட்டணியில் மாம்பழத்திற்கு மட்டுமே தொகுதி பங்கீடு செய்யப்பட்டிருக்கு. தாமரையுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. ஆனால் ராசியான தொகுதியில், பல்வேறு இடங்களில் தாமரையை வரைந்து ஆதரிப்பீர் உங்க வேட்பாளரை என்று எழுதி வச்சிருக்காங்களாம். என்னதான் நாட்டை ஆளுகிற கட்சியாக இருந்தாலும், இதெல்லாம் ரொம்ப ஓவர். அதுவும் மினிஸ்டர் தொகுதியில் இப்படியெல்லாம் செய்வதை ஏற்க முடியாது என்று ரத்தத்தின் ரத்தங்கள் முறைப்பு காட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம். இதனால் முட்டை மாவட்டத்தின் ராசியான தொகுதியில் ரோஷம் கொப்பளிக்க புகைச்சல் ஆரம்பமாகி இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.           

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்