SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!

2021-02-26@ 15:45:52

டெல்லி :  திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் தமிழ் மொழி, அதன் பழமை, தமிழ் மொழி இலக்கியம் குறித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தமிழ் குறித்து பேசிவிட்டு போவது வழக்கமான ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாது, பிரதமர் நரேந்திர மோடி, பல சமயங்களில் திருக்குறளை உதாரணமாக பயன்படுத்தி, அரசியல் விழாக்களில் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் கவனமும் தற்போது திருக்குறளின் பக்கம் திரும்பியுள்ளது.

இதனை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் திருக்குறளை வாசித்து வருவதாகவும், திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், 'திருக்குறளை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்,' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்