எல்லை அத்துமீறல் விவகாரத்தில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தான் சம்மதம்
2021-02-26@ 08:03:38

இஸ்லாமாபாத், பிப். 26: எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்ற இந்திய, பாகிஸ்தான் அரசுகள் முடிவு செய்துள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு, இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், `எல்லை அத்துமீறல் விவகாரத்தில், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடுமையாக பின்பற்ற இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. ஏற்கனவே, நடைமுறையில் இருக்கும் ஹாட்லைன் தொடர்புகள், எல்லையில் நடத்தும் கொடிக் கூட்டம் மூலமும் எல்லை அத்துமீறலுக்கு தீர்வு காணலாம்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புத்தாண்டுக்காக ராணுவ அரசு முடிவு மியான்மரில் 23,000 கைதிகள் விடுதலை
அமெரிக்காவில் பார், மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 3 பேர் காயம்
கொரோனா தொற்று அதிகரிப்பு: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்
இரட்டிப்பு வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது..! 30.23 லட்சம் பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி
விண்ணில் 6 மாத ஆய்வுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்