நீலகிரி வனப்பகுதியில் பூத்து குலுங்கும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள்
2021-02-23@ 21:18:43

கூடலூர்: முதுமலை பொக்காபுரம் வனப்பகுதிகளில் தற்போது ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரவில் அதிக பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயில் அதிகமாக நிலவும் இதன் காரணமாக செடி கொடிகள் காய்ந்த நிலையில், வனப்பகுதி வறட்சியாக காணப்படும். இக்காலகட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள ‘பிளேம்ஆப் தி பாரஸ்ட்’ மரங்களில் பூக்கள் மரங்கள் முழுவதும் பூத்து காணப்படும்.
வறட்சியான வனப்பகுதியில் செந்நிறமாக காணப்படும் இந்த மலர்கள் தீப்பிழம்புகள் போலக் காணப்படுவதாலும் தொலை தூரங்களில் இந்த மலர்களைப் பார்க்கும்போது காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதுபோல் காணப்படும். இதனால், வனச்சுடர் என்ற மற்றொரு பெயரும் இம்மலருக்கு உண்டு. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம் வனப்பகுதியில் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மலர்கள் பூத்து குலுங்குகின்றன. வறட்சியான காலத்தில் இந்த மலர்கள் பூப்பதால் பறவைகள், தேனீக்களுக்கு தேவையான தேன் கிடைக்கின்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி, புதுச்சேரியில் ரூ..15 கோடி தங்க நகைகள் பறிமுதல்
வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு களக்காடு, கடையநல்லூர் பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
கோவையில் இரவு நேரங்களில் வீட்டின் கதவில் தொங்கும் அதிமுக பரிசு பொருட்கள்
கோவை-மஞ்சூர் சாலையில் குட்டிக்கு காவலாக நின்ற யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
குப்பை லாரி சிறைபிடிப்பு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!