தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
2021-02-23@ 18:14:29

சென்னை: ராமசாமி படையாட்சியாரின் படத்தை தொடர்ந்து வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், வ.உ.சிதம்பரம், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர். இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்கள் உருவப்படத்தின் எண்ணிக்கை 15- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரும் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றப்பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்
பாலியல் தொல்லை விவகாரம்: விசாகா கமிட்டி ஐஜி மாற்றம்
சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு
பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு: கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்
மெரினாவில் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா நினைவிடம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!