தினமும் 4 மணிநேரம் பயிற்சி: ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் ஓய்வு பெற விரும்புகிறேன் : சானியா மிர்சா பேட்டி
2021-02-23@ 17:34:06

ஐதராபாத்:இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா(33). பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் முடித்த இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மிண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற 34 வயதான சானியா மிர்சா இந்தஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல தீவிரம்காட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ஒலிம்பிக் என் மனதில் உள்ளது. நான் தினமும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கிறேன், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான சவாலுக்கு என்னை பொருத்தமாக வைத்திருக்கிறேன், இது எனது 4வது ஒலிம்பிக் போட்டியாகும். ஒலிம்பிக் பதக்கம் என்பது எனது சாதனைகள் பட்டியலில் இல்லாத ஒரு விஷயம். டோக்கியோவில் பதக்கத்துடன் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன். நான் வெற்றிபெற ஒரு வாய்ப்பில் இருக்க விரும்புகிறேன். நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நான் உணர்கிறேன் என்றார்.
Tags:
சானியா மிர்சாமேலும் செய்திகள்
பிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி
பன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி
ரோட்டர்டாம் டென்னிஸ் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி
அகமதாபாத் டெஸ்ட் மீண்டும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!