பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறு
2021-02-23@ 17:09:41

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு பாஜக வினர் கூறிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி ஆதாரத்துடன் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை என்ற இடத்தில் பார்வதி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த பகுதியிலேயே அவருக்கு 3 கிளைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலத்தில் பாஜக இளைஞர் அணி மாநாடு நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பாஜகவினர் நகங்களில் அவ்வழியாக சென்றனர். அப்போது புதன்சந்தையில் நகங்களை நிறுத்தி ரூ. 5,000 பார்வதி ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் பணத்தை கொடுக்காமல் ஒவ்வொருவராக புறப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் அவர்களை மறித்து சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால் பாஜகவினர் பணம் கொடுக்காமல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணம் வேண்டுமென்றால் தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கடை ஊழியர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் செய்வது அறியாத திகைத்த கடை உரிமையாளர் பார்வதி முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பார்வதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாஜக மாநாட்டிற்காக சேலம் சென்றவர்கள் நாமக்கல்லில் சாப்பிட்டுவிட்டு தஞ்சையில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி
தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊரடங்கை அமல்படுத்த உத்திரப்பிரதேச அரசு மறுப்பு
நாளை முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்