'கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன' மத்திய அமைச்சரின் கருத்துக்கு ராகேஷ் திகாயத் பதில்
2021-02-23@ 15:29:15

பஞ்சாப்: கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன என பாரதிய கிசான் யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 3 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 'வெறும் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது' என கூறினார்.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் இது குறித்து கருத்து தெரிவித்தார். ' கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன' என அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துள்ளார். 'வெறுமனே கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களைத் திரும்பப்பெற வழிவகுக்காது என அமைச்சர் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த விளைச்சலையே அழிக்க முடியுமா? என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
அவற்றுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. வெறும் வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, மின்சார திருத்த மசோதா, விதை மசோதா என அனைத்தைப் பற்றியும் கேள்விகள் உள்ளன. இந்தப் போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல, ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பிற துறையினருக்குமானது. இந்த சட்டங்கள் ஏழைகளை அழித்து விடும். எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.
விவசாயிகளால் வயல்வெளிகளிலும், போராட்டக்களத்திலும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்ய முடியும். அது மட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும்' எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 14ம் தேதி முதல் முன்னுரிமை தரிசனம்: தலைமை செயல் அலுவலர் தகவல்
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
கிரிக்கெட் விளையாடிய சபரிமலை மேல்சாந்தி: சமூக வலைத்தளங்களில் வைரல்
மும்பையில் வெடிபொருட்களுடன் அம்பானி வீட்டருகே நின்ற காரின் உரிமையாளர் மர்மச்சாவு
கேரள லாட்டரியில் மேற்கு வங்க தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு
அரசு விழாவுக்கு சகோதரரை அனுப்பிய பீகார் அமைச்சர்: முதல்வர் நிதிஷ் கொதிப்பு
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!