புயல் நிவாரண பணம் வாங்கியவர்களுக்கு வேட்டு வைத்த ஐகோர்ட்… பணத்தை திருப்பி செலுத்தும் நிலை!
2021-02-23@ 14:24:21

சென்னை : புயல் நிவாரண நிதி 110 கோடி ரூபாயை தகுதியில்லாதவர்கள் மோசடியாக பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:சமீபத்தில் தமிழக கடலோர பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்த நிவாரண உதவிகளை தகுதியில்லாத பலர், தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை மோசடியாக பெற்று, 110 கோடி ரூபாய் வரை நிவாரண உதவியை பெற்றுள்ளனர்.
இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்த பின், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது.இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மோசடியாக நிவாரண உதவியை பெற்றவர்களிடம் இருந்து தொகையை திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்தும் அறிக்கை தாக்கல் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.மேலும், இந்த .மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Tags:
புயல்மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு : நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி மனு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
அரசியல் வேறுபாடுகள் கடந்து கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் : எல்.முருகன் வேண்டுகோள்!!
தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!