SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்: 40% - 50% தடுப்பூசி பணிகளை தனியாருக்கு ஒதுக்க முடிவு

2021-02-23@ 10:42:23

டெல்லி: நாடு முழுவதும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் தனியார் நிறுவனங்களை பெறும் அளவில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவர் செவிலியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தடுப்பூசி விநியோகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் 40 முதல் 50 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

  • 22-04-2021

    22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்