இந்தியாவிலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து கடத்தல்: விலை லிட்டருக்கு 22 வரை குறைகிறது
2021-02-23@ 00:59:14

புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது. ராஜஸ்தான், மபி.யில் பெட்ரோலின் விலை செஞ்சுரி அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இருந்து பெட்ரோல் கடத்தி வரப்பட்டு, உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளைக் காட்டிலும் லிட்டருக்கு ₹ 22 குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்றால் மக்கள் விடுவார்களா? இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்படும் பெட்ரோல் சாலை ஓரங்களில் டேங்கர் மூலம் விற்கப்படுவதால், பெட்ரோல் பங்க்குகளின் விற்பனையில் நாளொன்று 1,200 முதல் 1,800 லிட்டர் வரை குறைந்துள்ளது,’’ என தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை நேபாளம் கொள்முதல் செய்து, அந்நாட்டில் விற்பனைச் செய்கின்றது. இருப்பினும், அந்நாட்டில் இந்தியாவைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் ரூ.70.62க்கு பெட்ரோல் விற்பனையாகிறது. அதே போல, பிற அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானிலும் கூட பெட்ரோல், டீசல் குறைந்த விலையிலேயே விற்கப்படுகிறது.இதற்கு முன்பு, கடந்த 2018லும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 85ஐ தாண்டிய போது, நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65, டீசல் 55க்கு விற்பனையாது. அப்போதும், இதே போல் கடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!
2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு
பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!
நேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை
தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 448 குறைந்தது
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!