கல்வான் மோதலில் பலியான ராணுவ வீரர்களை இழிவு செய்ததாக 3 பேர் கைது: சீன அரசு அதிரடி
2021-02-23@ 00:50:03

பீஜிங்: கல்வான் மோதலில் பலியான ராணுவ வீரர்களை இழிவு செய்ததாக சீனாவில் 3 பேர் கைதாகி உள்ளனர். கடந்த ஆண்டு லடாக், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். சீன தரப்பில் 4 வீரர்கள் பலியாகினர். இந்த விஷயத்தை கூட, 8 மாதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் சீன அரசு ஒப்புக் கொண்டது. அதோடு, பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, தியாகம் செய்த வீரர்களுக்கு உயரிய விருதை சீன அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சீன அரசு வெளியிட்ட வீரர்கள் பலி எண்ணிக்கை குறித்து சந்தேகம் கிளப்பிய 38 வயதான புலனாய்வு பத்திரிகையாளர் கியு ஜிமிங் என்பவரை சீன அரசு கைது செய்துள்ளது. இவர் சீன வீரர்களை அவமதித்தாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதே போல், 28 மற்றும் 25 வயதுடைய இரு நபர்கள் வீ சாட்டில் சீன ராணுவ வீரர்களை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.சீன அரசு ஊடகங்கள் சீன ராணுவ வீரர்களின் வீர தீரத்தைப் பாராட்டிப் பேசியதோடு, சீன வீரர்களை இழிவு படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் கூறி எச்சரித்திருந்தது. இதனால் கல்வான் சம்பவம் குறித்து சந்கேகம் கிளப்பினால் கைது என்ற நிலை நிலவி வருகிறது.
மேலும் செய்திகள்
இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் சீன ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட 6.8% அதிகரிப்பு
8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்
கம்ப்யூட்டரிலும் வீடியோ கால்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி
விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல் முடக்கம்: வீடியோக்களும் அதிரடி நீக்கம்
இங்கிலாந்து இளவரசர், இளவரசி பதவி விலகிய விவகாரம் ஓராண்டுக்கு பின் ‘அரண்மனை’ ரகசியங்கள் அம்பலம்: ஹாரி - மேகன் மார்கல் தம்பதி வெளியேற்றப்பட்டனரா?
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் : அதிபர் ஜோபிடன் புகழாரம்!!
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!