காங்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் இத்தாலி தூதர் சுட்டுக் கொலை: ஐநா வாகன அணிவகுப்பில் பயங்கரம்
2021-02-23@ 00:44:56

கின்ஷசா: ஐநா. வாகன அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காங்கோவுக்கான இத்தாலி தூதர், இத்தாலி போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். ஐநா. உலக உணவு திட்டத்துக்கான வாகன அணிவகுப்பு காங்கோ நாட்டின் வடக்கு கிவுவில் உள்ள நைரன்காங்கோவின் கோமா பகுதியில் நடந்தது. அப்போது, தீவிரவாதிகள் மறைந்து இருந்து நடத்திய தாக்குதலில் காங்கோவுக்கான ஐநா தூதர் லூகா அட்டனாசியோ, இத்தாலி போலீஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி மாம்போ காவே கூறுகையில், இத்தாலி தூதரையும் சேர்த்து தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் 5 பேர் இருந்தனர்.
பலமுறை சுட்டதில் குண்டுகள் துளைத்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த ஐநா. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது,’’ என்று கூறினார். கடந்த 2018ம் ஆண்டு, இதே பகுதியில்தான் 2 இங்கிலாந்து நாட்டவர்கள் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டனர். தற்போதும் இதே பகுதியில், ஐநா. வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் யோஷிஹைட் சுகா..!!
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள்...14.44 கோடி பேர் பாதிப்பு....30.70 லட்சம் பேர் பலி!!
தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பலி: இலங்கை அரசு அதிர்ச்சி
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதா? போலீஸ் காவலில் புறா! வழக்கு பதிய பஞ்சாப்பில் ஆலோசனை
இந்தோனேஷியாவில் 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயம்
மபி.யில் கணவருக்கு இறுதிச் சடங்கு சீனாவில் இருந்து வீடியோவில் பார்த்து கதறி அழுத மனைவி
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!
22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்