SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசையமைப்பாளர், கூடைப்பந்து வீரரை தொடர்ந்து ராப் இசை பாடகரான 3வது கணவனிடம் விவாகரத்து கோரிய மாடல் அழகி: 4 குழந்தைகள் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை

2021-02-21@ 18:32:10

லாஸ் ஏஞ்சல்ஸ்: இசையமைப்பாளர், கூடைப்பந்து வீரர் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற மாடல் அழகி, தற்போது மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட ராப் இசை பாடகரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
சர்வதேச சூப்பர் மாடல் அழகி கிம் கர்தாஷியன் (40) என்பவரின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுமார் 180 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். அண்மையில்,  அவரது அழகு சாதான நிறுவனமும், பல நூறு கோடிகளை வசூல் செய்து மிகப்பெரிய  சாதனையை படைத்தது. ரியாலிட்டி ஷோ நடிகையான கிம், அமெரிக்கா மட்டுமின்றி  சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது இல்லற வாழ்க்கையில் பல சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறார். இப்போது, தனது 3வது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இசையமைப்பாளர் டாமன் தாமஸ் என்பவரை முதன் முதலாக கிம் கர்தாஷியன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் குடும்ப வாழ்வில் கசப்பு ஏற்பட்டதால், மூன்று ஆண்டுகளுக்கு டாமன் தாமசிடம் இருந்து கிம் கர்தாஷியன் விவாகரத்து ெபற்றார். அதன்பிறகு, 2011ம் ஆண்டில் கூடைப்பந்து வீரர் கிறிஸ் ஹம்ப்ரிஸ் என்பவரை கிம் கர்தாஷியன் திருமணம் செய்து கொண்டார்.

கிட்டதிட்ட ஒரு வருட ‘டேட்டிங்’ வாழ்க்கை நடத்திய இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான 72 நாட்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், இருவரும் தாங்களாகவே முன்வந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இதற்குப் பிறகு, 2012ம் ஆண்டில் ராப் இசை  பாடகர் கன்யே ெவஸ்ட் என்பவரை கிம் கர்தாஷியன் காதலித்தார். பின்னர் 2014ம் ஆண்டில் மூன்றாவதாக கன்யே ஜெஸ்டை திருமணம் செய்து கொண்டார். ஆடம்பரமாக நடந்த இந்த திருமணம், இத்தாலியின் ஃபோர்ட் டி  பெல்வெடெரில் நடந்தது. இந்த ஜோடி, நான்கு குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.

இருந்தும், கன்யே வெஸ்ட்டுக்கு மன நோய் இருப்பதாக கூறி, அவருடன் வாழ விருப்பம் இல்லாமல் கிம் கர்தாஷியன் ெபாதுவெளியில் கடந்த சில மாதங்களாக தெரிவித்து வந்தார். திருமணமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கிம் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது நான்கு குழந்தைகளையும் இருவரும் சேர்ந்தே பராமரிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடந்த அமெரிக்காவின் அதிபர்  தேர்தலில் கன்யே தான் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், கிம் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்