SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

2021-02-21@ 02:52:30

திருப்போரூர்: சென்னை அருகே படூரில் செயல்படும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் 22ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்துஸ்தான் கல்விக்குழுமத் தலைவர் எலிசபெத் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்துஸ்தான் கல்விக்குழும தலைமை செயல் அதிகாரி ஆனந்தஜேக்கப் வர்கீஸ், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் சூசன் மார்த்தாண்டன், இணை இயக்குனர் வி.ஜெ.பிலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் திருமகன் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலை, அறிவியல், சமூகவியல், வரலாறு, விஸ்காம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சியடைந்த 571 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழக தரவரிசைத்தகுதி (ரேங்க்) பெற்ற 11 மாணவர்களுக்கு கே.சி.ஜி.வர்கீஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக ₹1 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் சாமுவேல் சம்பத்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்