SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டணிக்காக தேமுதிக யாரிடமும் கெஞ்சவில்லை: அதிமுகவுக்கு எல்.கே.சுதீஷ் சூடு

2021-02-21@ 02:03:28

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தேமுதிக தேர்தல் ஆலோசனை கூடடம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக எழுச்சியாக உள்ளது. கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை. அதிமுக கூட்டணியில் நல்ல தொகுதிகளை கேட்போம். எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. எங்களுடன் (தேமுதிகவுடன்) கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்ததாக 3-வது பெரிய கட்சியாக தேமுதிகதான் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகதான் பெரிய கட்சி. இவ்வாறு அவர் கூறினார். கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும் என்று அதிமுகவுக்கு தேமுதிக தலைமை பல முறை பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அதை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் பலமுறை சந்தித்து பேசியபோதும் தேமுதிகவை உதாசினப்படுத்தினர். இதனால், கோபமடைந்த தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சவில்லை என்று சூடாக பேட்டியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்